நாசக என்பதன் பொருள் வினைகளை நீக்குதலையும் குறிக்கும் அதாவது "விநாசக"என்பது வினைகளை நீக்குதல் என்று பொருள்படும்.
தற்கால வழக்கில் அது மருவி இன்று விநாசக பானை என்பது விநாயகர்ப்பானை என்று அழைக்கப்படுகின்றது இருப்பினும் அதன் சரியான பொருள் விநாசக பானை என்பதாகு
விநாசக பானைப் பொங்கல் நிகழ்வு கும்பாபிஷேகம், சங்காபிஷேகம் என்பன ஒரு ஆலயத்தில் நிறைவுற்ற பின்னர் இடம்பெறும்.
அதாவது சங்காபிஷேகம் இடம்பெற்ற அதே நாளில் வரும் மாலை நேர பூஜை பெரும்பாலான ஆலயங்களில் விநாசக பானை பொங்கல் வைபவம் இடம்பெறும்
எமது ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சோதிட ஆலயத்தில் 04-01-2019 அன்று விநாசக பானை பொங்கல் வைபவம் பக்த அடியார்கள் ஆலைய பரிபாலன சபையினர், ஆலய குரு தலைமையில் இனிதே இடம்பெற்றது.